திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3105 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3105திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (இத்திருவாய்மொழியானது, தன்னைக் தற்பவர்களை அவன் திருவடிகளோடே சேர்விக்கும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத் திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன் திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11
பதவுரை Show / Hide
திரு அடியை,Thiru adiyai - ஸர்வாமியாய்
காரணனை,Kaarananai - நாராயணானாய்
கேசவனை,Kaeshavanai - பரஞ்சோதியாயிருக்கிற எம்பெருமானை
திரு அடி சேர்வது கருதி,Thiru adi saervadhu karuthi - கிட்டியநுபவிக்க விரும்பி
செழு குருகூர் சடகோபன்;,Sezhu kurukoor sadagopan - செழு குருகூர் சடகோபன்;
திரு அடி மேல்,Thiru adi mel - அவனது திருவடிகளின் மீது
உரைத்த,Uraitha - அருளிச்செய்த
தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்;,Thamil aayiraththul ippattum - தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்;
திரு அடியே,Thiru adiye - அந்தத் திருவடிகளையே
அடைவிக்கும்,Adaivikkum - அடையப்பண்ணும்;
திரு அடி சேர்ந்து,Thiru adi serndhu - (ஆதலால், நீங்கள்) அந்தத் திருவடிகளைக் கிட்டி
ஒன்றுமின்,Ondrumin - பொருந்தியிருக்கப் பாருங்கள்