திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 311 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
311பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 5
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து நஞ்சுமிழ் நாகம் கிடந் தநல் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப் பற அசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற–3-9-5
பதவுரை Show / Hide
பஞ்சவர்,Panchavar - பஞ்ச பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்,Thoodhan Aay - (துரியோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்
பாரதம்,Bharatham - (அத்துரியோதனநாதிகள் தன்சொற்படி இசைந்துவாராமையால்) பாரத யுத்தத்தை
கை செய்து,Kai Seithu - அணி வகுத்துச் செய்து,
கஞ்சு உமிழ்,Kanju Umizh - விஷத்தைக் கக்குகின்ற
நாகம் கிடந்த,Kaagam Kidandha - காளியன் கிடந்த
நல் பொய்கை புக்கு,Nal Poigai Pukku - கொடிய மடுவிலே புகுந்து
அஞ்ச பணத்தின் மேல் ,Anja Ak Kaaliyan Anjumbadi - (அக் காளியன்) அஞ்சும்படி (அவனது) படத்திலே
பாய்ந்திட்டு,Paayndhittu - குதித்து நடமாடி அக்காளியனை இளைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க
அருள் செய்த,Arul Seitha - அப் பாம்பின் பிராணனைக் கருணையால் விரட்டிட்ட
அஞ்சனவண்ணனை பாடிப்பற;,Anjanavannanai Paadippara - அஞ்சனவண்ணனை பாடிப்பற;
அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.,Asothaithan Singaththaip Paadippara - அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.