Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 312 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
312ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 6
முடியொன்றி மூவுல கங்களும் ஆண்டு உன்
அடியேற் கருளென்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடி நிலை யீந்தானைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற–3-9-6
முடி ஒன்றி,Mudi Ondri - திருமுடி சூடி
மூ உலகங்களும்,Moo Ulagangalum - பூமி, சுவர்க்கம், பாதாளம் என்ற மூன்று லோகங்களையும்
ஆண்டு,Aandu - பரி பாலித்துக் கொண்டு
உன் அடியேற்கு அருள் என்று,Un Adiyerku Arul Endru - தேவருடைய தாஸனான எனக்கு க்ருபை பண்ண வேணும் என்று வேண்டிக் கொண்டு
அவன் பின் தொடர்ந்த,Avan Pin Thodarndha - பெருமான் பின்னே தொடர்ந்து வந்த
படி இல் குணத்து பரதன் நம்பிக்கு,Padi Il Gunathu Barathan Nambikku - ஒப்பற்ற குணங்களை யுடையனான ஸ்ரீபரதாழ்வானுக்கு
அன்று,Andru - அக் காலத்திலே
அடி நிலை,Adi Nilai - ஸ்ரீபாதுகைகளை
ஈந்தானை,Einthaanaai - அளித்தருளின இராமபிரானை
பாடிப் பற,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற

அயோத்தியர்,Ayoththiyar - அயோத்தியையிலுள்ளவர்களுக்கு
கோமானை,Komaanaai - அரசனானவனை, பாடிப்பற