Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 313 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
313ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 7
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந் திட்டு அவன்
நீள் முடி யைந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற தூமணி வண்ணனைப் பாடிப் பற–3-9-7
காளியன் பொய்கை,Kaaliyan Poigai - காளியன் கிடந்த பொய்கையானது
கலங்க,Kalanga - கலங்கும்படி
பாய்ந்திட்டு,Paayndhittu - (அதில்) குதித்து
அவன்,Avan - அக் காளியனுடைய
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து,Neel Mudi Aindhilum Nindru Nadam Seithu - ஆகாசத்தளவும் நீண்ட ஐந்து படங்களின் மேலும் நின்று கூத்தாடி,
மீள,Meela - அவன் இளைத்துச் சரணம் புகுந்த பிறகு.
அவனுக்கு,Avanukku - அக் காளியனுக்கு
அருள் செய்து,Arul Seithu - (ப்ராணன் நிற்கும்படி) க்ருபை செய்தருளின்
வித்தகன்,Viththagan - லிஸ்மயநீயனான கண்ணபிரானுடைய
தோள் வலி,Thol Vali - புஜ பலத்தையும்
வீரம்,Veeram - வீரப் பாட்டையும் பாடிப் பற;
தூ மணி,Thoo Mani - பழிப்பற்ற நீலமணி போன்ற
வண்ணனை,Vannanai - நிறத்தை யுடையவனை பாடிப் பற