திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 315 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 9 | மாயச் சகட முதைத்து மருதிறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயர்க ளேற்றினைப் பாடிப் பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற–3-9-9 | பதவுரை Show / Hideமாயம்,Maayam - க்ருத்ரிமமான அஸுரராலிஷ்டமான சகடம்,Sakadam - சகடத்தை உதைத்து,Uthaiththu - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளியும் மருது,Marudhu - இரட்டை மருத மரங்களை இறுத்து,Iruththu - இற்று விழும்படி பண்ணியும், (பின்பு) ஆயர்களோடு,Aayargalodu - இடையர்களோடு கூட போய்,Poi - (காடேறப்) போய் ஆநிரை,Aanirai - பசுக்களின் திரளை காத்து,Kaaththu - ரக்ஷித்தும் அணி,Ani - அழகிய வேயின் குழல்,Veyin Kuzhal - வேய்ங்குழலை ஊதி,Oothi - ஊதியும் வித்தகன் ஆய் நின்ற ,Viththagan Aay Nindra - விஸ்மயநீயனாய் நின்ற ஆயர்கள் ஏற்றினை,Aayargal Etrhinai - இடையர்க்குத் தலைவனான கண்ணபிரானை பாடிப்பற ஆநிரை மேய்த்தானை பாடிப் பற,Aanirai Meyththaanai Paadip Para - ஆநிரை மேய்த்தானை பாடிப் பற |