திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 316 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 10 | காரார் கடலை யடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோ டொன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீளரசீந்த
ஆரா வமுதனைப் பாடிப் பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற–3-9-10 | பதவுரை Show / Hideகார் ஆர் கடலை,Kaar Aar Kadalai - கருமை பொருந்திய கடலை அடைத்திட்டு,Adaiththittu - (மலைகளினால்) அடைத்து விட்டு (ஸேது கட்டி) இலங்கை,Ilangai - (அர்த்த ஸேது வழியாக) லங்கையிலிருந்து புக்கு,Pukku - (அவ்விடத்தில்) ஒராதான்,Oraathaan - (தன் வீரப்பாட்டை) மதியாத ராவணனுடைய பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்,Pon Mudi Onpathodu Onraiyum - அழகிய தலைகள் பத்தையும் நேரா,Naeraa - அறுத்துப் போகட்டு அவன் தம்பிக்கே,Avan Thambikke - அவனது தம்பியான ஸ்ரீலிபீஷணாழ்வானுக்கே நீள் அரசு ஈந்த,Neel Arasu Eindha - நெடுங்காலம் நடக்கும்படியான ஆதி ராஜ்யத்தை அளித்தருளின் ஆரா அமுதனை,Aaraa Amudhanai - எவ்வளவு உண்டாலும் திருப்தியைத் தாராத அம்ருதம் போல் இனியனான இராமபிரானை பாடிப்பற;,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற அயோத்தியர்,Ayoththiyar - அயோத்தியிலுள்ளார்க்கு வேந்தனை அரசனானவனை பாடிப் பற |