திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3163 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3163திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி - நம்பியுடைய திவ்யாயுத வர்க்கம் உள்ளும் புறமும் ஓக்கத் தோற்றா நின்றது என்கிறாள்.) 3
நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் குன்ற மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3
பதவுரை Show / Hide
அன்னையரும்,Annaiyarum - தாய்மாரான நீங்களும் (என்னைப்பற்றி)
நின்றிடும் என்று,Nindridum endru - இப்பெண் ஸ்தப்தையாய் நிற்கின்றாளென்று சொல்லியும்
திசைக்கும் என்று,Thisaikkum endru - இப்பெண் அறிவழிந்து கிடக்கிறாளென்று சொல்லியும்
நையும் என்று,Naiyum endru - இப்பெண் நைநின்றாளென்று சொல்லியும்
முனிதிர்,Munithir - வெறுத்துரைக்கின்றீர்கள்;
குன்றம் மாடம்,Kundram maadam - குன்றம்போன்ற மாடங்கணிந்த
திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Thirukkudungudi nambiyai naan kanda pin-; - திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;
வென்றி வில்லும்,Vendri villum - ஜயசீலமான சார்ங்கமும்
தண்டும்,Thandum - லௌமோதகியென்கிற கதையும்
வாளும்,Vaalum - நந்தாவாளும்
சக்கரமும் சங்கும்,Chakkaramum sangum - திருவாழி திருச்சங்குகளும்
நின்று,Nindru - நிரந்தரமாக நின்று
கண்ணுள் தோன்றி,Kannul thondri - என் கண்ணுள்ளே காணப்பட்டு
நீங்கா,Neengaa - நீங்குகின்றனவில்லை;
நெஞ்சுள்ளும்,Nenjullum - நெஞ்சினுள்ளும்
நீங்கா,Neengaa - நீங்குகின்றனவில்லை.