திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3164 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - திருத் தோள் மாலை திருப் பரி வட்டம் முதலானவை எல்லாம் என் பார்ஸ்வத்திலே நின்று என்னை நலியா நின்றன -என்கிறாள்) 4 | நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4 | பதவுரை Show / Hideகண்ண நீர்சன்,Kanna neersan - (இவனது) கண்ணீர்த் துளிகளானவை நீங்க இல்லா என்று,Neenga illaa endru - துடைத்தாலும் நிற்கின்றனவில்லை என்று சொல்லி தண்,Than - குளிர்ந்த மாலை,Maalai - மாலைவடிவமான தண் துழாயும்,Than thuzhaayum - திருத்துழாயும் பொன் முடியும்,Pon mudiyum - திருவபிஷேகமும் வடிவும்,Vadivum - திருமேனியும் அன்னையரும் முனிதிர்,Annaiyarum munithir - தாய்மார்களான நீங்களும் சீறுகின்றீர்கள். பாங்கு தோன்றும்,Paangu thondrum - திருவரைக்குப் பொருத்தமாகக் காணப்படுகிறது பட்டும்,Pattum - பட்டுபீதாம்பரமும் நாணும்,Naanum - திரு நாணும் தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்;,Thenkol solai thirukkudungudi nambiyai naan kanda pin; - தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்; பூ,Poo - அழகிய |