திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3165 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3165திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருக்குறுங்குடி நம்பிக்கு கீர்த்தி தகுதியானால் போலே -ஒன்றுக்கு ஓன்று தகுதியாய் இருக்கிற திருப் பவளம் முதலான திரு முகத்தில் அழகுகள் ஆனவை என் உயிர் நிலையில் நலியா நின்றன -என்கிறாள்.) 5
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5
பதவுரை Show / Hide
பக்கம் நோக்கி நிற்கும் என்ற,Pakkam nokki nirkum endra - ‘(இவள்) அவன் எந்த பக்கமாக வருகின்றானென்று எதிர்பார்த்திருக்கிறானென்றும்,
நையும் என்று,Naiyum endru - (வாக்காணாமையாலே) நைகின்றான் என்றும் சொல்லி
அன்னையரும்,Annaiyarum - தாய்மாரான நீங்களும்
நீண்ட புருவங்களும்,Neenda puruvangalum - நீண்டிருக்கின்ற புருவங்களும்
தக்க,Thakka - தகுதியான
தாமரைக்கண்ணும்,Thaamaraikannum - தாமரை போன்ற திருக்கண்களும்
முனிதிர்,Munithir - முனிந்து பேசுகின்றீர்கள்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;,Thakka keerthith thirukkudungudi nambiyai naan kandapin-; - தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;
தொக்க,Thokka - ஒன்றாகத்திரண்ட
சோதி,Sothi - சோதியையுடைய
தொண்டை வாயும்,Thondai vaayum - கொல்லைக்கனிபோன்ற அதரமும்
பாவியேன்,Paaviyaan - பாவியாகிய என்னுடைய
ஆவியின் மேலான,Aaviin melaana - உயிர்நிலையிலே நின்று கலியா நின்றன