திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3173 | திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சர்வ வித்யா வேதனமும் வித்யா ப்ரவர்த்திகாதிகளும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் -என்கிறாள்.) 2 | கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2 | பதவுரை Show / Hideகற்கும் கல்வி என் மகள்,Karkum kalvi en magal - இன்று வார்த்தை கற்கும் பருவமாயிருக்கின்ற எனது பெண்பிள்ளை; சற்கும் கல்விக்கு எல்லை இவன் என்னும்,Sarkum kalvikku ellai ivan ennum - நான் எல்லை யில்லாதபடி கல்விகள் கற்றிருக்கின்றேனென்கிறாள்; கற்கும் கல்வி ஆவேனும் யானே என்றும்,Karkum kalvi aavenum yaane endrum - கற்கப்படுகிற கல்விகளெல்லாம் நானேயென்கிறாள்; கற்கும் கல்வி சாரமும் நானே என்னும்,Karkum kalvi saaramum naane ennum - கற்கும் கல்விகளின் ஸாரமாகிய திருமந்திரம் முதலியனவும் நானே யென்கிறாள். காண்கின்ற இவை,Kaanginra ivai - (இங்ஙனமாக இப்பெண் பிள்ளையிடத்துக்) காணப்படுகின்ற இந்த வாசகங்களானவை கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்,Karkum kalvi seivenum yaane ennum - கற்கப்படுகிற கல்விகளை நானே உண்டாக்கினேனென்கிறாள் கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்,Karkum kalvi theerpenum yaane ennum - கற்கப்படுகிற கல்விகளை (ஸம்ஹார காலத்தில்) முடித்து நானே என்னெஞ்சிலிட்டு வைத்துக் கொண்டிருக்கிறனென்கிறாள்; கற்கும் கல்வி நாதன் வந்து ஏறகொலோ,Karkum kalvi naadhan vandhu eerakolo - கற்கும் கல்விகளால் பிரதிபாதிக்கப்படுகிற எம்பெருமான் வந்து? ஆவேசித்ததனாலோ? (அறியேன். கற்கும் கல்வியிர்க்கு,Karkum kalvirkku - இனிக் கற்க வேண்டும் கல்விகளையுடையிரான உங்களுக்கு என் சொல்கேன்,En solgean - என்னென்று சொல்லுவேன்? |