திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3177 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3177திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கோவர்த்தன உத்தரணம் முதலான கிருஷ்ண சேஷ்டிதங்கள் எல்லாம் பண்ணினேன் நான் என்று இவள் சொல்லா நின்றாள் என்கிறாள்.) 6
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும் இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும் இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் இன ஆயர் தலைவனும் யானே என்னும் இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ? இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்? இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6
பதவுரை Show / Hide
இனம் வேல் எண்ணி என் மகள்,Inam vel enni en magal - வேற்படையை யொத்திருக்கிற கண்ணழகையுடையவளான என் மகள்,
இனம் வேய் மலைஏந்தினேன் யானே என்றும்,Inam vey malai yentinen yaane ennum - திரள் திரளான மூங்கில்களையுடைய கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்தேன் யானே யென்கிறாள்;
இனம் ஏறுகள் செற்றேனும் யானே என்னும்,Inam erugal setrenum yaane ennum - கூட்டமாகவந்த எருதுகளைக் கொன்றேனும் யானே யென்கிறாள்;
இனம் ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்,Inam aan kanru meithenum yaane ennum - கூட்டங் கூட்டமான கன்றுகளை மேய்த்ததும் நானே யென்கிறாள்;
இனம் ஆரிரை காத்தேனும் யானே என்னும்,Inam aarirai kaathenum yaane ennum - திரளான பசுங் கூட்டங்களை ரக்ஷித்தேனும்நானே யென்கிறாள்.
இனம் ஆயர் தலைவனும் நாயே என்னும்,Inam aayar thalaivanum naaye ennum - இடையர் கூட்டங்களுக்குத் தலைவனான கோபாலகிருஷ்ணனும் நானே யென்கிறான்; (இப்படி இவன் சொல்லுவதானது
இனம் தேவர் தலைவன் வந்து ஏற கொலோ,Inam thevar thalaivan vandhu erakolo - நித்யஸூரிகள் குழங்களுக்குத் தலைவனான ஸர்வேச்வரன் வந்து ஆவேசித்ததனாலோ?
உற்றன இவை,Utrana ivai - இவள் அடைந்த இத்தகையவிகாரங்களை
இனம் வேல் கண் நல்லீர்க்கு,Inam vel kan nallirkku - வேல் போன்ற கண்ணழகையுடையீரான உங்களுக்கு
என் சொல்லுகேள்,En sollugeal - ஏனென்று சொல்லுவேன்?