திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3178 | திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமான் ஆஸ்ரிதர் விஷயத்தில் இருக்கும் இருப்பை தன் படியாக பேசா நின்றாள் -என்கிறாள்.) 7 | உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக் கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7 | பதவுரை Show / Hideஎன்னுடைய பேதை,Ennudaia pethai - என்னுடைய சிறு பெண்பிள்ளை எனக்கு உற்றார்கள் ஆரும் இல்லை என்னும்,Enakku utrargal aarum illai ennum - எனக்கு உறவினர் ஒருவருமில்லையென்கிறாள். இங்கு எனக்கு உற்றார்கள் எல்லாரும் என்னும்,Ingu enakku utrargal ellaaarum ennum - இவ்வுலகில் எனக்கு யாவரும் உறவினர் என்கிறாள்; உற்றார்களை செய்வேனும் யானே என்னும்,Utrargalai seivenum yaane ennum - (சிலரை) எனக்கு உற்றார்களாம்படி செய்வதும் நானே யென்கிறாள். உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,Utrargalai azhipenum yaane ennum - (அற்பபலன்களுக்காகக்) கிட்டுமவர்களை (அந்த அற்பபலன்களைக் கொடுத்து அகற்றுவதும் நானே யென்கிறாள். உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்,Utrargalukku utrenum yaane ennum - அநந்யப்ரயோஜநர்களாய்க் கிட்டுமவர்களுக்கு எல்லாவுறவு முறையும் நானேயென்கிறாள்; உற்றார் இலிமாயன் வந்து ஏறக் கொலோ,Utrar ilimaayan vandhu erakolo - (இவள் இப்படிச் சொல்லுவதானது) மதம் முயற்சியால் தன்னைக் கிட்டினாரில்லாத ஆச்சர்ய சக்தியுக்தனான எம்பெருமான் வந்து ஆவேசிதத்னாலோ? உற்று உரைக்கின்ற,Utru uraikindra - உள்ளூறக் கண்டு சொல்லும் வார்த்தைகளை உற்றீர்கட்கு,Utrirkadku - உறவினரானவுங்களுக்கு யான் என் சொல்லி சொல்லுகேன்,Yaan en solli sollugean - நான் என்ன பாசுரத்தையிட்டுச் சொல்லுவேன்? |