திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3179 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3179திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஜகத் பிரதானராக சாஸ்திரங்களில் சொல்லப் படுகிற சதுர்முகப் பிரமுகரும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்.) 8
உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும் உரைக்கின்ற திசை முகன் யானே என்னும் உரைக்கின்ற அமரரும் யானே என்னும் உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக் கொலோ? உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்? உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8
பதவுரை Show / Hide
முக் கண்பிரான் யானே என்னும்,Muk kanpiraan yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) ஈச்வரனாகச் சொல்லப்படுகிற சிவபிரான் நானே யென்கிறாள்.
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,Uraikindra dhisaimugan yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) ப்ரஸித்தனான பிரமனும் நானே யென்கிறாள்;
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்,Uraikindra amararum yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) பேசுகின்ற தேவர்களும் யானே யென்கிறாள்;
உரைக்கின்ற அமரர்கோன் யாயே என்னும்,Uraikindra amararkon yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) ப்ரஸித்தனான தேவேந்திரனும் நானே யென்கிறாள்;
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்,Uraikindra munivarum yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) ப்ரஸித்தர்களான நாரதாதிமஹரிஷிகளும் நானே யென்கிறாள்;
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறகொலோ,Uraikindra mugil vannan erakolo - (இப்படிச் சொல்லுவதானது) ப்ரஸித்தனான காளமேகவண்ணப் பெருமான் வந்து ஆவேசித்ததனாலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு,Uraikindra ulagaththirkku - சொல்லுகின்ற சொல்லென்று கேட்கிற நாட்டாரான உங்களுக்கு,
உரைக்கின்ற என் கோமளம் ஒண் நொடிக்கு,Uraikindra en komalam on nodikku - விலக்ஷணமாகப் பேசுகின்ற எனது அழகிய சிறு பெண்ணைப் பற்றி
உரைக்கின்ற இவை,Uraikindra ivai - இவள்தான் சொல்லுகின்ற இப்பேச்சுக்களை
என் சொல்லுகேண்,En sollugean - என்னவென்று கூறுவேன்?