| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 318 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 1 | நெறிந்த கருங் குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம் செறிந்த மணி முடிச் சனகன் சிலை யிறுத்து நினைக் கொணர்ந்தது அறிந்து அரசு களை கட்ட அருந்தவத்தோன் இடை விலங்க செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓரடையாளம்–3-10-1 | நெறிந்த கருங்குழல்,Nerindha Karunguzhal - நெறிப்புக் கொண்ட கரிய கூந்தலை யுடையவளும் மடவாய்,Madavaai - மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ! நின் அடியேன்,Nin Adiyen - உமது அடியவனான என்னுடைய விண்ணப்பம்,Vinnappam - விஜ்ஞாபகம் (ஒன்றைக் கேட்டருள வேணும்): செறிந்த,Serindha - நெருங்கின மணி,Mani - ரத்நங்களை யுடைய முடி,Mudi - கிரீடத்தை அணிந்த சனகன்,Sanagan - ஜநக மஹாராஜன் (கந்யா சுல்யமாக ஏற்படுத்தின) சிலை,Silai - ருத்ர தநுஸ்ஸை இறுத்து,Iruththu - முறித்து நினை,Nina - உம்மை (பிராட்டியை) கொணர்ந்தது,Konarnthathu - மணம் புரிந்து கொண்டதை அறிந்து,Arindhu - தெரிந்து கொண்டு அரசு களை கட்ட,Arasu Kalai Katta - (துஷ்ட) ராஜாக்களை (ப்பயிருக்கு)க்களை களைவது போலழித்த அருந் தவத்தோன்,Arun Thavaththon - அரிய தவத்தை யுடைய பரசுராமன் இடை விலங்க,Idai - நடு வழியில் தடுக்க செறிந்த சிலை கொடு,Nadu Vazhiyil Thadukka - (தனக்குத்) தகுந்த (அப்பரசுராமன் கையிலிருந்த விஷ்ணு) தநுஸ்ஸை வாங்கிக் கொண்டு தவத்தை,Thavaththai - (அப் பரசுராமனுடைய) தபஸ்ஸை சிதைத்ததும்,Sithaiththadhum - அழித்ததும் ஓர் அடையாளம்,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |