திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3181 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3181திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ஸ்வர்க்க நரகாதிகளான சகல பலங்களும் நான் இட்ட வழக்கு என்னும் -என்கிறாள்.) 10
கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோல மில் நரகமும் யானே என்னும் கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் கோலம் கொள் தனி முதல் யானே என்னும் கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ? கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10
பதவுரை Show / Hide
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்,Kolam kol suvarkkamum yaane ennum - (என் மகளானவள்) அழகிய ஸ்வர்க்கலோகமும் நானிட்ட வழக்கென்கிறாள்
கோலம் இல் நரகமும்யானே என்னும்,Kolam il naragamum yaane ennum - துக்கமே வடிவெடுத்த நரகமும் நானிட்ட வழக்கென்கிறாள்;
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்,Kolam thigazh mokkamum yaane ennum - இன்பமயமான மோஷமும் நானிட்டவழக்கென்கிறாள்;
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்,Kolam kol uyirkalum yaane ennum - பலபல சரீரங்களைப் பரிக்ரஹிக்கிற ஆத்மாக்களும் நானிட்ட வழக்கென்கிறாள்;
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கு,Kolam thigazh kodhai en koondhalukku - அழகிய மாலையையுடைய மயிர் முடியையுடைவளான என்மகள் விஷயமாக
கோலம் கொள்தனி முதல் யானே என்னும்,Kolam kol thani mudhal yaane ennum - விசித்திரகாரியங்களைச் செய்யவல்லதான மூலப்ரக்ருதியம் நானிட்ட வழக்கென்கிறாள்;
கோலம் கொள்முகில் வண்ணன் ஏறகொலோ,Kolam kol mugil vannan eerakolo - (இப்படிச் சொல்லுவதானது) அழகிய காள மேகவண்ணப்பெருமான் வந்து ஆவேசித்தனாலோ?
கோலம் கொள் உலகத்திர்க்கு என் சொல்லுகேன்,Kolam kol ulagaththirkku en sollugean - அழகாக வந்து உட்கார்ந்திருக்கின்ற உங்களுக்கு என்ன சொல்லுவேன்?