திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 319 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 2 | அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மட மானே
எல்லியம் போதினி திருத்தல் இருந்ததோரிட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்–3-10-2 | பதவுரை Show / Hideஅல்லி,Alli - அகவிதழ்களை யுடைய அம் பூ,Am Poo - அழகிய பூக்களால் தொடுக்கப் பட்ட மலர்க் கோதாய்,Malark Kothai - பூமாலை போன்றவளே! அடி பணிந்தேன்,Adi Panindhen - (உமது) திருவடிகளில் வணங்கிய நான் விண்ணப்பம்,Vinnappam - விஜ்ஞாபநமொன்றை சொல்லு கேன்,Sollu Kaen - (உம்மிடத்தில்) சொல்லுவேன்; துணை மலர் கண்,Thunai Malar Kan - ஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர் போன்ற கண்களையும் மடம்,Madam - மடப்பத்தையு முடைய மானே,Maanae - மான் போன்றவளே! கேட்டருளாய்,Kaettarulai - (அதைத்) திருச் செவி சாத்த வேணும்; அம் எல்லி போது,Am Elli Podhu - அழகிய இராத்திரி வேளையில் இனிது இருத்தல்,Inidhu Iruththal - இனிமையான இருப்பாக இருந்தது,Irundhathu - இருந்ததான ஒர் இடம் வகையில்,Or Idam Vagaiyil - ஓரிடத்தில் மல்லிகை,Malligai - மல்லிகைப் பூவினால் தொடக்கப்பட்ட மா மாலை கொண்டு,Maa Maalai Kondu - சிறந்த மாலையினால் ஆர்த்ததும்,Aarththadhum - (நீர் இராம பிரானைக்) கட்டியதும் ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |