திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 32 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
32பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 10
பெருமா வுரலில் பிணிப் புண்டிருந்து அங்கு இருமா மருதம் இறுத்த இப் பிள்ளை குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே–1-2-10
பதவுரை Show / Hide
பெரு மா உரலில்,Peru maa uralil - மிகப்பெரிய உரலோடு
பிணிப்புண்டு,Pinippundu - கட்டுண்டிருந்து இருந்து
அங்கு,Angu - அந்த நிலைமையிலே
இரு மா மருதம்,Eru maa marutham - இரண்டு பெரிய மருத மரங்களை
இறுத்த,Eruththa - முறித்தருளின
இ பிள்ளை,E pillai - இக் கண்ண பிரானுடைய,
குரு மா,Guru maa - மிகவும் சிறந்த
மணி பூண்,Mani poon - கௌஸ்துபாபரணமானது
குலாவி திகழும்,Kulaavi thigazhum - அசைந்து விளங்கா நின்றுள்ள
திருமார்வு இருந்த ஆ காணீரே,Thirumaarvu irundha aa kaanire - திருமார்வு இருந்த ஆ காணீர்!
சே இழையீர் வந்து காணீரே,Se izhaiyeer vandhu kaanire - செவ்விய ஆபரணங்களை யுடைய பெண்காள் வந்து காணீர்!