| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 321 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 4 | வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம் தேரணிந்த அயோத்தியர் கோன் பெருந்தேவீ கேட்டருளாய் கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமையைக் கொண்டதும் ஓரடையாளம்–3-10-4 | வார் அணிந்த,Vaar Anindha - கச்சை அணிந்த முலை,Mulai - முலையையும் மடவாய்,Madavaai - மடப்பத்தையுமுடைய பிராட்டீ! வைதேவீ,Vaithevi - விதேஹ வம்சத்திற் பிறந்தவனே! விண்ணப்பம்,Vinnappam - ஒரு விஜ்ஞாபகம்; தேர் அணிந்த,Ther Anindha - தேர்களாலே அலங்காரமான அயோத்தியர் கோன்,Ayoththiyar Kon - அயோத்தியிலுள்ளார்க்கு அரசனாதற்கு உரிய இராமபிரானது பெருந்தேவீ,Perundhevi - பெருமைக்குத் தகுந்த தேவியே! கேட்டருளாய்,Kaettarulai - அவ் விண்ணப்பத்தைக் கேட்டருளவேணும்; கூர் அணிந்த,Koor Anindha - கூர்மை பொருந்திய வேலாயுதத்தில் வல்லவனாகிய குகனோடும்,Guganodum - குஹப் பெருமாளோடு கூட கங்கை தன்னில்,Gangai Thannil - கங்கை கரையிலே சீர் அணிந்த தோழமை,Seer Anindha Thozhamai - சிறப்புப் பொருந்திய ஸ்நேஹத்தை கொண்டதும்,Kondadhum - பெற்றதும் ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |