| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 322 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 5 | மானமரு மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம் கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து தேனமரும் பொழிற் சாரல் சித்திர கூடத்து இருப்ப பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓரடையாளம்-3-10-5 | மான் அமரும்,Maan Amarum - மானை யொத்த மென் நோக்கி,Men Nookki - மென்மையான கண்களை யுடையவளான பால் மொழியாய்,Paal Mozhiyaai - பால் போல் இனியபேச்சை யுடையவளே! விண்ணப்பம்;,Vinnappam - ஒரு விஜ்ஞாபகம்; கான் அமரும்,Kaan Amarum - காட்டில் பொருந்திய கல் அதர் போய்,Kal Adhar Poi - கல் நிறைந்த வழியிலேயே காடு உறைந்த காலத்து,Kaadu Uraindha Kaalaththu - காட்டில் வஸித்த போது தேன் அமரும் பொழில்,Then Amarum Pozhil - வண்டுகள் பொருந்திய சோலைகளை யுடைய சாரல்,Saaral - தாழ்வரையோடு கூடிய சித்திர கூடத்து,Siththira Koodaththu - சித்திர கூட பர்வதத்தில் இருப்ப,Irup - நீங்கள் இருக்கையில் பரதன் நம்பி,Barathan Nambi - பரதாழ்வான் பணிந்ததும்,Panindhadum - வந்து வணங்கியதும் ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |