| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 323 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 6 | சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓரடையாளம்–3-10-6 | சித்திரக்கூடத்து ,Siththirak Koodaththu - சித்திரகூட பர்வதத்தில் இருப்ப,Irup - நீங்களிருவரும் ரஸாநுபவம் பண்ணிக் கொண்டிருக்கையில் சிறு காக்கை,Siru Kaakkai - சிறிய காக்கையின் வடிவு கொண்டு வந்த ஜயந்தன் முலை தீண்ட,Mulai Theenda - (உமது) திரு முலைத் தடத்தைத் தீண்ட அத்திரமே கொண்டு,Aththiramae Kondu - (அதனாற் சீற்றமுற்ற ஸ்ரீராமன்) ப்ரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்து எறிய,Eriya - பிரயோகிக்க, அனைத்து உலகும்,Anaiththu Ulagum - (அக் காகம் அதற்குத் தப்புவதற்காக) உலகங்களிலெல்லாம் திரிந்து ஓடி,Thirindhu Oadi - திரிந்து ஓடிப் போய் வித்தகனே,Viththagane - (தப்ப முடியாமையால் மீண்டு இராமபிரானையே அடைந்து) “ஆச்சரியமான குணங்களை யுடையவனே! இராமா,Raamaa - ஸ்ரீ ராமனே! ஓ,O - ஓ !! நின் அபயம்,Nin Abayam - (யான்) உன்னுடைய அடைக்கலம்” என்று அழைப்ப,Endru Azhaippa - என்று கூப்பிட அத்திரமே,Aththiramae - (உயிரைக் கவர வேணுமென்று விட்ட அந்த) அஸ்த்ரமே அதன் கண்ணை,Adhan Kannai - அந்தக் காகத்தின் ஒரு கண்ணை மாத்திரம் அறுத்ததும்,Aruththadhum - அறுத்து விட்டதும் ஓர் அடையாளம் |