திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3238 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3238திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (இப் பாசுரத்தில் “என்னுடைய பந்துங்கழலும் தந்துபோகு நம்பீ!“ என்றிருக்கையாலே பந்தும் கழலுமாகிற சில லீலோபகரணங்கள் எம்பெருமான் கையில் இருப்பதாகவும் அவற்றைப் பராங்குச நாயகி அபேக்ஷிப்பதாகவும் தெரிகிறது.) 1
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன் மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே! உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்? என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1
பதவுரை Show / Hide
மன்னுடை இலங்கை,Manudai Ilankai - அரசனையுடைத்தா யிருந்த லங்காபுரியினுடைய
அரண்,Aran - கோட்டைகளையெல்லாம்
காய்ந்த,Kaintha - சீறியழித்த
மாயவனே,Maayavane - ஆச்சரியசேஷ்டிதங்களை யுடையவனே
நம்பி,Nambi - ஸகலருணபரிபூரணனே!
நின் அருள் சூடுவார்,Nin Arul Sooduvaar - உனது கிருபையை அநுபவிப்பவர்களான
மின் இடை மடவார்கள் முன்பு,Min Idai Madavaarkal Munbu - மின்னற்கொடிபோன்ற இடையை யுடையவர்களான மாதர்களின் முன்னிலையில்
நான் அது அஞ்சுவன்,Naan Adhu Anjuvan - நான அதைப்பற்றி அஞ்சாநின்றேன், (அவர்கள் உன்னை உபேக்ஷிக்க நேருமென்பதுபற்றி அஞ்சுகின்றே னென்கை)
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்,Unnudaiya Soondaayam Naan Arivan - உன்னுடைய க்ருத்ரிம்மெல்லாம் நானறிவேன்
இனி அது கொண்டு செய்வது என்,Ini Adhu Kondu Seyvadhu En - உனக்கும் எனக்கும் ஸம் பந்தமற்றவின்பு உன்னுடையக்ருத்ரிமத்தால் உனக்கு ஸாத்யமானது என்ன இருக்கிறது?
என்னுடைய பந்தும் கழலும் தந்து,Ennudaiya Bandhum Kazhalum Thandhu - எனது பந்தையும் அம்மானையையும் தீருப்பிக் கொடுத்துவிட்டு
போகு,Pogu - உனக்கு விருப்பமான விடத்தேபோய்ச்சேர்