திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3239 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3239திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -இவள் போகச் சொன்ன இடத்திலும் போகாதே இவளைப் பார்த்து மந்த ஸ்மிதம் பண்ணின அதிலே சிதில சிந்தையாய் எங்களை நாழியாதே உன் அபி மேதைகள் இருந்த பரிசாரத்திலே போய் அவர்கள் வருகைக்கு ஈடாக இருந்து குழலை ஊது என்கிறாள்.) 2
போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்; தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2
பதவுரை Show / Hide
போகு நம்பீ!,Pogu Nambi - பிரானே! அப்பால்போ
உன்,Un - உன்னுடைய
தாமரை புரை கண் இணையும்,Thamarai Purai Kan Inaiyum - தாமரைபோன்ற கண்களிரண்டும்
செம் வாய் முறுவலும்,Sem Vai Muruvalum - சிவந்த அதர்தில் நின்றும் தோன்றுகிற சிரிப்பும்
ஆகுலங்கள் செய்ய,Aagulangal Seyya - வீணாக எங்களை ஆகுலப்போவதற்கே
அழிதற்கே,Azhitharkae - அதனால் சிதிலப்பட்டுப் போவதற்கே
நோற்றோமே,Noatrome - இட்டுப் பிறந்தவர்களன்றோ நாங்கள்
நின் அருள் சூடுவார்,Nin Arul Sooduvaar - உனது அருளை அநுபவிக்கப் பிறந்த
தோகை மா மாயிலார்கள்,Thogai Maa Mayilargal - தோகைவிரித்த நல்ல மயில்போன்ற கூந்தலையுடைய மாதர்கள்
ஓசை செவி வைத்து எழ,Osai Sevi Vaithu Ezha - (வேணுகானத்தின்) ஓசையைக்கேட்டு எழுந்து வரும்படியாக
ஆகள் போக விட்டு,Aagal Poga Vittu - பசுக்களை மேய்க்கப் போகவிட்டு
போய் இருந்து,Poy Irundhu - அங்கேறப் போயிருந்து
குழல் ஊது,Kuzhal Oothu - புல்லாங்குழலை ஊதிக் கொண்டுகிட.