| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 324 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 7 | மின்னொத்த நுண்ணிடையாய் மெய் யடியேன் விண்ணப்பம் பொன்னொத்த மானொன்று புகுந்து இனிது விளையாட நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓரடையாளம்–3-10-7 | மின் ஒத்த,Min Oththa - மின்னலைப் போன்ற நுண் இடையாய்,Nun Idaiyaai - மெல்லிய இடையை யுடையவளே! மெய் அடியேன்,Mei Adiyen - உண்மையான பக்தனாகிய எனது விண்ணப்பம்,Vinnappam - விண்ணப்பத்தை (க் கேட்டருள வேணும்;) பொன் ஒத்த,Pon Oththa - பொன் நிறத்தை ஒத்த (நிறமுடைய) மான் ஒன்று,Maan Ondru - (மாரீசனாகிய) ஒருமான் புகுந்து,Pugundhu - (பஞ்சவடியில் நீரிருக்கும் ஆச்ரமத்தருகில் வந்து இனிது விளையாட,Inidhu Vilaiyaada - அழகாக விளையாடா நிற்க, நின் அன்பின் வழி நின்று,Nin Anbin Vazi Nindru - (அதை மாயமான் என்று இளையபெருமாள் விலக்கவும்) உம்முடைய ஆசைக்குக் கட்டுப்பட்டு நின்று சிலை பிடித்து,Silai Pitiththu - வில்லை யெடுத்துக் கொண்டு எம்பிரான்,Empiraan - இராமபிரான் ஏக,Eaga - அம்மானைப் பிடித்துக் கொணர்வதாக அதன் பின்னே தொடர்ந்து) எழுந்தருள, பின்னே,Pinnae - பிறகு அங்கு,Angu - அவ் விடத்தில் இலக்குமணன்,Ilakkuamanan - இளைய பெருமாளும் பிரிந்ததும்,Pirindhadhum - பிரிந்ததுவும் ஓர் அடையாளம் |