திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3242 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3242திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் உன் பொய்க்குப் பெரு நிலை நிற்கும் பரிகரத்தை யுடைய நீ அஹ்ருதயமாக எங்கள் பேச்சைக் கொண்டாடுவது இனிய பேச்சையுடைய எங்கள் பூவையையும் கிளியையும் கொண்டாடுவது ஆகாதே கொள்-என்கிறாள்.) 5
கழறேல் நம்பி! உன் கை தவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண் சக்கர நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான் மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5
பதவுரை Show / Hide
நம்பீ கழறேல்,Nambi Kazharel - பிரானே! மேலிட்டு வார்த்தைசொல்வதை எங்களிடம் வைத்துக்கொள் வேண்டா!
உன் கைதவம்,Un Kaidhavam - உனது கபடங்களை
மண்ணும் விண்ணும் நன்கு அறியும்,Mannum Vinnum Nangu Ariyum - உபய விபூதியும் நன்றாக அறியும்
நிழறு,Nizharu - இஷ்டப்படி நடத்தப்பெறுகிற
திண் சக்கரம் தொல்படையாய்,Thin Chakkaram Tolpadiyai - திண்ணிய சக்கரமாகிற அநாதியான ஆயுதத்தை யுடையவனே!
உனக்கு நான் ஒன்று உணர்த்துவன்,Unakku Naan Ondru Unarthuvan - உனக்கு நான் ஒருவிஷயம் அறிவிக்கக் கேளாய்,
நின் அருள் சூடுவார்,Nin Arul Sooduvaar - உனது க்ருபைக்குப்பாத்திர பூதைகளான
மழறு தேன்மொழியார்கள்,Mazharu Thenmozhiyaarkal - மழலைத் தேன்மொழியார்களான மாதர்கள்
மனம் வாடி நிற்க,Manam Vaadi Nirka - நெஞ்சுகொதித்து நிற்கும்படியாக
எம் குழறு பூவை யொடும்,Em Kuzhru Poovai Yodum - அநக்ஷர ரஸமாகப்போசுவின்ற எமது பூவைப் பறவையோடும்
கிளியோடும்,Kiliyodum - கிளியோடும்
குழகேல்,Kuzhagel - லீலாரஸம் கொண்டாட வேண்டா நீ.