| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3245 | திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ப்ரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும் பெருமையை யுடைய உனக்கு எங்களை ஸ்பர்சித்துகே கையில் பாவையைப் பறிக்கிற இது கார்யம் அன்று என்கிறாள்.) 8 | பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர் கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்! இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை உணக்கி, நீ வளைத்தால், என் சொல்லார் உகவாதவரே?–6-2-8 | யாவையும் யாவரும்,Yaavaiyum Yaavarum - அசேதனப்பொருள்களும் சேதனைப்பொருள்களுமான ஸகலத்தையும் பிணக்கி,Pinakki - ஸம்ஹாரதசையிலே ராம்ரூப லிபாகமில்லாதபடி ஒன்றாகப் பிசிறிவைத்து (பிறகு ஸ்ருஷ்டிகாலத்திலே) பிழையாமல்,Pizhaiyaamal - ஒருவருடைய கரும்மும் மாறிப் போகாதபடி பேதித்தும்,Pedithum - தேவயானி மநுஷ்ய யோனி திர்யக்யோனி முதலியபோதங்களைப் பண்ணினவிடத்தும் பேதி யாதது,Pethi Yaadhathu - அவற்றின்கணுள்ள தோஷங்களால் ஸ்வரூபத்துக்குச் சேதம் வராதபடியான ஓர் கணக்கு இல்கீர்த்தி வெள்ளம்,Oru Kanakku Ilkeerthi Vellam - அத்விதீய நிர்வதிக கீர்த்தி ப்ரவாஹத்தையும் கதிர்ஞானம்,Kathirgnanam - ஸங்கல்பருபஜ்ஞானத்தையும் மூர்த்தியையும்,Moorthiyaiyum - வடிவாகைவுடையவனே எம் தோழிமார்,Emm Thozhimaar - எமது தோழிமார்கள் எம்மை இணக்கி,Emmai Inakki - எங்களை இசைவித்து விளையாட போதுமின் என்ன,Vilaiyada Podhumin Enna - விளையாட வாருங்கோள் என்றழைக்க போந்தோமை,Poandomai - (நீ இங்கிருப்பது அறியாமே வந்த எங்களை) நீ உணக்கி வளைத்தால்,Nee Unakki Valaithaal - நீ நெருக்கித் தகைந்தால் உகவாதவர் என் சொல்லார்,Ugavaadhavar En Chollaar - வேண்டாதார் என்னதான் சொல்லமாட்டார்கள். |