திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3247 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3247திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ப்ரணயரோஷமென்பது நெடும்போது பெருகிச் செல்லமாட்டாது, அப்படி நெடுகிச் செல்லுவது ரஸிகர்களுடைய படியுமன்று. ஊடலானது கூடலிலே மூட்டியல்லது நிற்காதாகையினால் இனிக் கூடல் தலைக்காட்டத் தொடங்கிவிட்டது. பிரானே! நீதான் வெற்றிக்கொண்டாய், நாங்கள் தோற்றோம் என்று முடிக்கிறார்கள்.) 10
நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்! இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்! நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10
பதவுரை Show / Hide
நின்று இலக்கு முடியினாய்,Nindru ilakku mudiyinai - நிலைநின்று விளங்குகிற திருவபிஷேகத்தை யுடையவனே!
இருபத்தோல் கால்,Irupatthol kal - இருபத்தொரு தலைமுறை
அரசுகைளை கட்ட,Arasukalai kattu - அரசர்களை வேர்ப்பறியாகப் பறித்த
வென்றி நீள் மழுவா,Venri neel mazhuva - ஜயசீலனான பெரிய மழுப்படையை யுடையவனே!
முன் வியல் ஞாலம் படைத்தாய்,Mun viyal gnalam padaithai - முன்பு விஸ்தீர்ணமான ஜகத்தைப் படைத்தவனே!
இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்ய தோன்றிய,Indru iv aayar kulaththai veedu uyyath thondriya - இப்போது இவ்விடைகுலத்தை உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக அவதரித்த
கரு மாணிக்கம் சுடர்,Karu maanikam sudar - கருமாணிக்கம் போன்ற திருநிறத்தை யுடையவனே!
ஆய்ச்சியாம்,Aaychiyam - இடைக்சிகளான நாங்கள்
என்றும்,Endrum - எந்நாளும்
நின் தன்னால் நலிவே படுவோம்,Nin thannal nalive paduvom - உன்னால் ஹிம்ஸைப்படுகிறவர்களே யன்றி ஸுகப்படுகிறவர்களல்லோம்.