| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 325 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 8 | மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம் ஒத்த புகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத் தேட அத் தகு சீரயோத்தியர் கோன் அடையாள மிவை மொழிந்தான் இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே-3-10-8 | மை தகு,Mai Thagu - மைபோல் விளங்குகிற மா மலர்,Maa Malar - சிறந்த புஷ்பங்களை அணிவதற்கு உரிய குழலாய்,Kuzhalaai - கூந்தலை யுடையவளே! வைதேவி,Vaithevi - வைதேஹியே! ஒத்த புகழ்,Oththa Pugazh - “பெருமாளோடு இன்பத் துன்பங்களை) ஒத்திருக்கப் பெற்றவன்” என்ற கீர்த்தியை யுடைய வானரர் கோன் உடனிருந்து,Vaanarar Kon Udanirundhu - (இராமபிரானோடு) கூட இருந்து நினை தேட,Ninaith Theda - உம்மை தேடும்படி (ஆள் விடுகையில் என்னிடத்து விசேக்ஷமாக அபிமானிக்க) அத் தகு சீர்,Ath Thagu Seer - (பிரிந்த) அந்த நிலைக்குத் தகுதியான குணமுள்ள அயோத்தியர் கோன்,Ayoththiyar Kon - அயோத்தியிலுள்ளார்க்குத் தலைவைரான பெருமாள் அடையாளம் இவை,Adaiyaalam Ivai - இவ் வடையாளங்களை மொழிந்தான்,Mozhindhaan - (என்னிடத்திற்) சொல்லி யருளினான்; அடையாளம்,Adaiyaalam - (ஆதலால்) (யான் சொன்ன) அடையாளங்கள் இத் தகையால்,Ith Thagaiyaal - இவ்வழியால் (வந்தன); (அன்றியும்) ஈது,Eedhu - இதுவானது அவன்,Avan - அவ்விராம பிரானுடைய கை மோதிரம்,Kai Modhiram - திருக்கையிலணிந்து கொள்ளும் மோதிரமாகும். |