திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3251 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -திரு விண்ணகர் சேர்ந்த பிரானுடைய கல்யாண குணங்களை ஒழிய ஒருவருக்கும் உத்தாரகம் இல்லை என்கிறார் -நகரமும் நாடுகளும்-சிறுமை பெருமையாலே விரோதம் சொல்லிற்று / நிலனாய் விசும்பாய்ச் -ரூபியான நிலனும் அரூபியான விசும்புமாய் / புகர்கொள் கீர்த்தி-என்றது திரு நாட்டில் காட்டில் திரு விண்ணகரிலே புகுந்த பின்பு அவனுடைய கல்யாண குணங்கள் நிறம் பெற்ற படி) 3 | நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3 | பதவுரை Show / Hideநகரமும்,Nagaramum - நகரத்தில் உள்ளவர்களும் நாடுகளும்,Naadugalum - நாட்டிலுள்ளவர்களுமாய் ஞானமும்,Gnanamum - அறிவும் மூடமும் ஆய்,Moodamum aai - அறியாமையுமாய் நிகர் இல் சூழ் சுடர் ஆய்,Nigar il soozh sudar aai - ஒப்பற்ற பரந்த ஒளியும் இருளாய்,Irulaai - இருளுமாய் நிலன் ஆய்,Nilanaai - நிலமும் விசும்பு ஆய்,Visumbuaai - ஆகாசமுமாய் சிகர,Sikara - சிகரங்களையுடைய மாடங்கள் சூழ்,Maadangal soozh - மாடங்கள் சூழ்ந்த திருவிண்ணகர்,Tiruvinnagar - திருவிண்ணகரை சேர்ந்த பிரான்,Serndha piraan - சேர்ந்த ஸ்வாமியின் புகர் கொள்,Pugar kol - ஒளி பொருந்திய கீர்த்தி அல்லால்,Keerthi allaal - குணகீர்த்தியைத் தவிர யாவர்க்கும்,Yaavarkkum - எவருக்கும் புண்ணியமே,Punniyame - உய்வதற்குரிய புண்ணியம் இல்லை,Illai - வேறு இல்லை |