| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 326 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 9 | திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெருஞ் சபை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல் வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9 | திக்கு,Thikku - திக்குகளிலே நிறை,Nirai - நிறைந்த புகழ் ஆனன்,Pugazh Aanan - கீர்த்தியை யுடையவனான ஜநக ராஜனுடைய தீ வேள்வி,Thee Velvi - அக்நிகளைக் கொண்டு செய்யும் யாகததில் சென்ற,Sendra - (விஸ்வாமித்திரருடன்) போன மிக்க பெருசபை நடுவே,Mikka Perusabai Naduvae - மிகவும் பெரிய ஸபையின் நடுவில் வில்லிறுத்தான்,Villiruththaan - ருத்ர தநுஸ்ஸை முறித்த இராமபிரானுடைய மோதிரம்,Modhiram - மோதிரத்தை கண்டு,Kandu - பார்த்து மலர் குழலாள்,Malar Kuzhalaal - பூச்சூடிய கூந்தலை யுடையவளான சீதையும்,Seethaiyum - ஸுதாப் பிராட்டியும், அனுமான்,Anumaan - ‘வாராய் ஹனுமானே! அடையாளம் ?,Adaiyaalam - (நீ சொன்ன) அடையாளங்களெல்லாம் ஒக்கும்,Okkum - ஒத்திரா நின்றுள்ளவையே என்று,Endru - என்று (திருவடியை நோக்கிச்) சொல்லி (அந்தத் திருவாழியை) உச்சி மேல் வைத்துக் கொண்டு,Uchchi Mael Vaiththuk Kondu - தன் தலையின் மீது வைத்துக் கொண்டு உகந்தான்,Ugandhaan - மகிழ்ந்தான் |