| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 327 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 10 | வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம் பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார் ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.–3-10-10 | வார் ஆரும்,Vaar Aarum - கச்சு அணிந்திருக்கைக்கு உரிய முலை,Mulai - முலையையும் மடலாள்,Madalaal - மடப்பத்தை யுமுடையவளான வைதேவிதனை,Vaithevidhanai - ஸீதா பிராட்டியை கண்டு,Kandu - பார்த்து சீர் ஆரும்,Seer Aarum - சக்தியை யுடையவனான திறல்,Thiral - சிறிய திருவடி தெரிந்து,Therindhu - (பெருமாளிடத்தில் தான்) அறிந்து கொண்டு. உரைந்து,Uraindhu - (பின்பு பிராட்டியிடத்திற்) சொன்ன அடையாளம்,Adaiyaalam - அடையாளங்களை (க் கூறுவதான) பார் ஆளும் புகழ்,Paar Aazhum Pugazh - பூமி யெங்கும் பரவின கீர்த்தியை யுடையராய் புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான பட்டர்பிரான் பாடல்,Pattarpiraan Paadal - பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை வல்லார்,Vallaar - ஓத வல்லார்கள் ஏர் ஆரும் வைகுந்தத்து,Er Aarum Vaikunthaththu - வல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீவைகுண்டததில் இமையவரோடு,Imaiyavarodu - நித்ய ஸூரிகளோடு இருப்பார்,Irupaar - கோவையா யிருக்கப் பெறுவார்கள். |