| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 33 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 11 | நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான் தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழ லீர்வந்து காணீரே-1-2-11 | நாள்கள்,Naalgal - (கண்ணன் பிறந்த பின்பு சென்ற) நாட்கள் ஓர்நாலு ஐந்து திங்கள் அளவிலே,Ornaalu aindhu thingal alavile - ஒரு நாலைந்து மாதத்தளவிலே தாளை நிமிர்ந்து,Thaalai nimirndhu - காலைத் தூக்கி சகடத்தை,Sakataththai - சகடாஸுரனை சாடிப்போய்,Saadippoy - உதைத்துவிட்டு, வாள் கொள்,Vaal kol - ஒளிகொண்டதாய் வளை,Valai - வளைந்திராநின்றுள்ள எயிறு,Eyiru - கோரப்பற்களையுடைய பூதனையினது ஆர் உயிர்,Aar uyir - அரிய உயிரை வவ்வினான்,Vavvinan - முடித்த கண்ணனுடைய தோள்கள் இருந்த ஆ காணீரே,Tholgal irundha aa kaanire - தோள்கள் இருந்த ஆ காணீர்! சுரி குழலீர் வந்து காணீரே,Suri kuzhalir vandhu kaanire - சுருண்ட கேசத்தையுடைய பெண்காள்! வந்து காணீர்!! |