Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 330 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
330ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 3
கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொரு தழிய
சிலையால் மராமர மெய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தட வரை கொண்டடைப்ப
அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர்–4-1-3
கொலை யானை,Kolai Yaanai - கொலை செய்வதையே இயல்பாக வுடைய (குவலய பீடமென்னும் யானையினுடைய
கொம்பு,Kombu - தந்தங்களை
பறித்து,Pariththu - பறித்துக் கொண்டவனும்,
கூடலர்,Koodalar - (ஜகஸ்தாதத்திலுள்ள ராக்ஷஸர்களாகிய) சத்துருக்களுடைய
சேனை,Saenai - சேனையானது
அழிய,Azhiya - அழியும்படி
பொருது,Porudhu - போர் செய்தவனும்,
சிலையால்,Silaiyaal - வில்லாலே
மராமரம்,Maraamaram - ஸப்த ஸால வ்ருக்ஷங்களை
மெய்த,Meidha - எய்தவனுமான
தேவனை,Thevanai - எம்பிரானை
சிக்கன நாடுதிரேல்,Sikkana Naadhuthireel - த்ருடாத்யவஸாயத்தோடு தேடுகிறீர்களாகில்,
குரங்கு இனம்,Kurangu Inam - (அவனிருக்குமிடஞ் சொல்லுகிறேன்;) வாநர ஸேனையானது
தடவரை,Thadavarai - பெரிய மலைகளை
தலையால்,Thalaiyaal - (தமது) தலைகளினால்
தாங்கிக் கொண்டு சென்று,Thaangik Kondu Sendru - சுமந்து கொண்டு போய்
அடைப்ப,Adaippa - கடலின் நடுவே அணையாக) அடைக்க
அலை ஆர் கடல் கரை,Alai Aar Kadal Karai - அலையெறிகிற கடற்கரையிலே
வீற்றிருந்தானை,Veetrirundhaanai - எழுந்தருளியிருந்த இராமபிரானை
அங்குத்தை கண்டார் உளர்,Anguththai - அந்த ஸந்நிவேசத்தில் கண்டார் உளர்