திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3303 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3303திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (நிகமத்தில் இப்பத்தும் வல்லார் இட்ட வழக்காய் இருக்கும் திருநாடு என்கிறார்) 11
வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக் கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11
பதவுரை Show / Hide
வைத்த மா நிதி ஆம்,Vaitha maa nidhi aam - சேமித்து வைத்த மஹா நிதிபோன்ற
மது சூதனையே அலற்றி,Madhu soodanaie alatri - எம்பெருமானையே வாய்வெருவி கொத்து அலர்பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன
கொத்து அலர்பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன,Kothu alar pozhil soozh kurugur sadagopan sonna - பூங்கொத்து அலருகிற சோலைகளால் சூழப்பட்ட திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்குத் அருளிச்செய்த
பத்து நூற்றுள்,Pathu nootrul - ஆயிரத்தினுள்ளே
இப் பத்து,ep pathu - இத்திருவாய்மொழியை
அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்து,Avan ser thirukolurkkay siththam vaiththu - அவன் வர்த்திக்கிற திருக்கோளூரிலேயே மனம் பதிந்து
உரைப்பார்,Uraippar - உரைக்க வல்லவர்கள்
திகழ்,Thigazh - நித்யமாக விளங்குகின்ற
பொன் உலகு ஆள்வார்,Pon ulagu aalvaar - பரமபதத்தை ஆளப் பெறுவர்கள்.