| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 331 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 4 | தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட மாயக் குழவியதனை நாடுதிறில் வம்மின் சுவடுரைக்கேன் ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல்விடை யேழினையும் வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டாருளர்–4-1-4 | பரந்த,Parandha - எங்கும் பரவின தோயம் நடுவு,Thoyam Naduvu - ஜலத்தின் நடுவே சூழலின்,Soozhalin - உபாயத்தினால் தொல்லை வடிவு கொண்ட,Thollai Vadivu Konda - பழமையான (பெரிய) வடிவைச் சுருக்கிக் கொண்ட மாயம் குழலி அதனை,Maayam Kuzhali Adhanai - அந்த ஆச்சர்யக் குட்டியை நாடுதிறில்,Naadhuthiril - தேட முயன்றீர்களாகில் வம்மின்,Vammin - (இங்கே) வாருங்கள்; சுவடு உரைக்கேன்,Suvadu Uraikkaen - (உங்களுக்கு) ஓரடையாளம் சொல்லுகின்றேன்; ஆயர் மகள்,Aayar Magal - (ஸ்ரீகும்பர் என்னும்) ஆயருடைய பெண் பிள்ளையும் மடம்,Madam - மடப்பம் என்ற குணத்தை உடையவளுமான பின்னைக்கு ஆகி,Pinnaikku Aagi - நப்பின்னைப் பிராட்டிக்காக அடல் விடை யேழினையும்,Adal Vidai Eaezhinaiyum - வலிய ரிஷபங்களேழும் வீய,Veea - முடியும்படியாக பொருது,Porudhu - (அவற்றோடு) போர் செய்து (அந்த ஆயாஸத்தாலே) வியர்த்து நின்றானை,Viyarththu Nindraanai - குறு வெயர்ப்பரும்பின வடிவுந்தானுமாய் நின்றவனை மெய்யம்மையே,Meiyyammayae - உண்மையாகவே கண்டார் உளர் |