| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 332 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 5 | நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல் வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேரேற்றி சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டாருளர்–4-1-5 | நீர்,Neer - (எம்பெருமானது ஸ்ரீபாத) தீர்த்தமானது ஏறு,Eru - ஏறப் பெற்ற செம் சடை,Sem Sadai - சிவந்த ஜடையையுடைய நீல கண்டனும்,Neela Kandhanum - (விஷமுடையதனால்) கறுத்த மிடற்றை யுடையவனான சிவ பெருமானும். நான்முகனும்,Naanmughanum - சதுர் முக ப்ரஹ்மாவும் முறையால்,Muraiyaal - (சேஷ சேஷி பாவமாகிற) முறையின்படி சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற,Seer Eru Vaasagam Seiyya Nindra - சிறந்த சொற்களைக் கொண்டு துதிக்கும்படி அமைந்து நின்ற திருமாலை,Thirumaalai - ச்ரிய : பதியாகிய எம்பெருமானை நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில், (இதைக் கேளுங்கள்;) வார் ஏறு,Vaar Eru - கச்சை அணிந்த கொங்கை,Kongai - முலைகளை யுடைய உருப்பிணியை,Urupiniyai - ருக்மிணிப் பிராட்டியை வலிய,Valiya - பலாத்காரமாக பிடித்துக்கொண்டு தேர் ஏற்றி,Ther Eritti - (தனது) திருத் தேரின் மேல் ஏற விட்டு சேனை நடுவு,Saenai Naduvu - (அவ்வளவிலே சிசுபாலதிகளான பல அரசர்கள் எதிர்த்துவர) அவ்வரசர்களுடைய ஸேநா மத்யத்திலே போர் செய்ய,Por Seiyya - (அவ்வரசர்களோடு )யுத்தம் செய்ய சிக்கென கண்டார் உளர்,Sikkena Kandaar Ular - திண்மையான (த்ருடமாக) கண்டார் உளர் |