Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 333 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
333ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 6
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறி துவரை
எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்–4-1-6
பொல்லா வடிவு உடைபேய்ச்சி,Polla Vadivu Udaipeychchi - மஹா கோரமான வடிவை யுடைய பூதனை யானவள்
அஞ்ச,Anja - மாளும்படியாக
புணர்முலை,Punarmulai - தன்னில் தான் சேர்ந்திருள்ள (அவளது) முலையிலே
வாய் மடுக்க வல்லான்,Vaai Madukka Vallaan - (தனது) வாயை வைத்து உண்ண வல்லவனும்
மா மணிவண்ணன்,Maa Manivannan - நீலமணி போன்ற நிறத்தை யுடையவனுமான எம்பெருமான்
மருவும் இடம்,Maruvum Idam - பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடத்தை
நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில்
பௌவம் ஏறி துவரை,Pauvam Eri Thuvarai - (இதைக் கேளுங்கள்:) கடலலைகள் வீசப் பெற்றுள்ள ஸ்ரீத்வாரகையிலே
எல்லாரும் சூழ,Ellaarum Soozha - தேவிமார் எல்லாரும் சுற்றுஞ் சூழ்ந்து கொண்டிருக்க
பல் ஆயிரம் பெரு தேவிமாரொடு,Pal Aayiram Peru Devimaarodu - (அந்தப்) பதினாறாயிரம் தேவிமாரோடு கூட
சிங்காசனத்து,Singaasanaththu - ஸிம்ஹாஸநத்தில்
இருந்தானை கண்டார் உளர்,Irundhaanai Kandaar Ular - எழுந்தருளி யிருக்கும் போது கண்டார் உளர்