Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 335 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
335ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 8
நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையை
பாழி லுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர்–4-1-8
நாழிகை ,Naazhikai - (பகல் முப்பது) நாழிகைகளை
கூறி விட்டு,Koouri Vittu - பங்கிட்டுக்கொண்டு
காத்து நின்ற,Kaaththu Nindra - (ஜயத்ரதனைக்) காத்துக் கொண்டிருந்த
அரசர்கள் நம் முகப்பே,Arasargal Nam Mugappae - ராஜாக்கள் முன்னிலையில்
நாழிகை போக,Naazhikai Poga - (பகல் முப்பது) நாழிகையும் போயிற்றென்று தோற்றும்படியாக
படை,Padai - (தன்) ஆயுதமாகிய திருவாழியாழ்வானைக் கொண்டு
பொருதவன்,Porudhavan - (ஸூர்யனை) மறைத்தவனும்
தேவகி தன் சிறுவன்,Devagi Than Siruvan - தேவகிப்பிராட்டியின் பிள்ளையுமான கண்ணபிரான் உள்ள இடம் கேட்கிறீர்களாகிய சொலலுகின்றேன்;
(உள்ள இடம்),Ulla Idam - எழுந்தருளியிருக்குமிடத்தை
ஆழி கொண்டு,Aazhi Kondu - திருவாழியினால்
இரவி,Iravi - ஸூர்யனை
மறைப்ப,Maraippa - (தான்) மறைக்க,
சயத்திரதன்,Sayaththiradhan - (அதனால் பகல் கழிந்த்தாகத் தோற்றி வெளிப்பட) ஜயத்ரனுடைய
தலை,Thalai - தலையானது.
பாழில் உருள,Paazhil Urula - பாழியிலே கிடந்துருளும்படி
படை பொறாதவன் பக்கமே,Padai Poraadhavan Pakkamae - அம்பைச் செலுத்தின அர்ஜுநனருகில்
கண்டார் உளர்,Kandaar Ular - (அவ் வெம்பெருமானைக்) கண்டாருண்டு.