| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3359 | திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (பராங்குசநாயகியானவள் தனது உள்ளத்தினுள்ளே ஒரு பெரியதிருவடித் திருநாள் நடந்து செல்லுகிறபடியை பேசி, தென்திருப்பபேரையிலே போகவேணுமென்று தனக்குப் பிறந்த துணிவைத் தாய்மாரிடம் கூறுகின்றாள்.) 1 | வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்! வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும் பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே. -7-3-1 | அன்னை மீர்காள்!,Annai meerkal! - தாய்மார்களே வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி,Vellai suri sangodu azhi endhi - வெண்ணிறத்தையும் சுரியையு முடைய ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் ஸூதர்சநத்தையும் ஸூதர்நசத்தையும் ஏந்திக்கொண்டு தாமரைக் கண்ணன்,Thaamarai kannaan - செந்தாமரைக் கண்ணனான பெருமான் என் நெஞ்சின் ஊடே,En nenjin oode - எனது நெஞ்சினுள்ளே புள்ளே கடாகின்ற ஆற்றை,Pulle kadaagindra aatrai - நடத்துகிறபடியை காணீர்,Kaaneer - நீங்கள் அறிகினறீர்களில்லையே! என்சொல்லி சொல்லு கேன்,En solli sollu kaen - இவ்வநுபவத்துக்கு என்ன பாசுரமிட்டு நான் சொல்லுவேன்;(இனி நான் செய்ய நினைத்ததாவது) வெள்ளம் சுகம் அவன் வீற்றிருத்த,Vellam sugam avan veettrithu - ஆனந்த வெள்ளமே வடிவெடுத்தவானான பெருமான் வீற்றிருக்கு மிடமாயும் வேதம் ஒலியும் விழா ஒலியும் பிள்ளை குழாம் விளையாட்டு ஒலியும் அறா,Vedam oliyum vizha oliyum pillai kulaam vilaiyaattu oliyum araa - வேதகோஷமும் உத்ஸவகோஷமும் சிறுபிள்ளைகளின் விஹார கோலாஹலமும் இடையறாமலிருக்கப் பெற்ற தாயுமுள்ள திருப்பேரெயில்,Thirupereayil - திருப்பேரெயில் என்னுந் திருப்பதியிலே நான் சேர்வன்,Naan servan - நான் சென்று சேரக்கடவேன். |