திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 336 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
336பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 9
மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவுமெல்லாம் திண்ணம் விழுங்கி யுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் எண்ணற் கரிய தோரேனமாகி இரு நிலம் புக்கிடந்து வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டாருளர்–4-1-9
பதவுரை Show / Hide
மண்ணும்,Mannum - பூமியையும்
மலையும்,Malaiyum - மலைகளையும்
மறி,Mari - அலை யெறியா நின்றுள்ள
கடல்களும்,Kadalgallum - கடல்களையும்
மற்றும் யாவும் எல்லாம்,Matrum Yaavum Ellaam - மற்றுமுண்டான எல்லாப் பொருள்களையும்
திண்ணம்,Thinnam - நிச்சயமாக
விழுங்கி,Vizhungi - (ப்ரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து நோக்கி
உமிழ்ந்த,Umizhndha - (பின்பு ப்ரளயங்கழிந்தவாறே அவற்றை வெளி…..காண) உமிழ்ந்து
தேவனை,Thevanai - எம்பெருமானை
சிக்கென,Sikkena - ஊற்றத்துடனே
நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில், (இதனைக் கேளுங்கள்.)
எண்ணற்கு அரியது,Ennarku Ariyadhu - நினைக்க முடியாத (பெருமையையுடைய)
ஓர்,Or - ஒப்பற்ற
ரேனமாகி ,Raenamaagi - அவதரித்து
புக்கு,Pukku - ப்ரளய வெள்ளத்தில் புகுந்தது
இரு நிலம்,Eru Nilam - பெரிய பூமியை
இடந்து,Edandhu - அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து (அவ்வளவிலே பூமிப்பிராட்டி தன்னை வந்து அணைக்க,)
வண்ணம்,Vannam - அழகியதும்
கரு,Karu - கறுத்ததுமான
குழல்,Kuzhal - குந்தலையுடைய
மாதரோடு ,Maadharodum - (அந்த) பூமிப்பிராட்டியோடு
மணந்தானை கண்டார் உளர்,Manandhaanai Kandaar Ular - ஸமச்லேஷித்தருளினவனை கண்டார் உளர்