| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 337 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 10 | கரிய முகில் புரை மேனி மாயனைக் கண்ட சுவடுரைத்து புரவி முகம் செய்து செந்நெலோங்கி விளை கழனிப் புதுவை திருவிற் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே–4-1-10 | கரியமுகிற் புரை மேனி,Kariyamugir Purai Maeni - கரு மலர் போன்ற திருமேனியுடையனும் மாயனை,Maayanai - ஆச்சரிய செய்கைகளை யுடையனுமான கண்ணபிரானை கண்ட சுவடு,Kanda Suvadu - ஸேவித்த அடையாளங்களை உரைத்த,Uraitha - அருளிச் செய்த; செந்நெல்,Sennel - செந்நெற் பயிர்களானவை ஓங்கி,Ongi - (ஆகாசமளவும்) உயர்ந்து புரவி முகம் செய்து,Puravi Mugam Seidhu - குதிரை முகம் போலத் தலை வணங்கி விளை,Vilai - விளையா நிற்கப் பெற்ற கழனி,Kazhani - வயல்களை யுடைய புதுவை,Puduvai - ஸ்ரீவில்லிபுத்தார்க்குத் தலைவரும் திருவின்,Thiruvin - (விஷ்ணு பக்தியாகிற) செல்வத்தினால் பொலி,Poli - விளங்கா நின்றுள்ளவரும் மறை வாணன்,Marai Vaanan - வேதத்துக்கு நிர்வாஹகருமான பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியாழ்வார் சொன்ன,Sonna - அருளிச்செய்த மாலை பத்தும்,Maalai Paththum - சொல் மாலையாகிற இப் பத்துப் பாட்டையும் பரவும் மனம் உடை,Paravum Manam Udai - அநுஸத்திக்கைக் கீடான மநஸ்ஸை யுடையவரும் பக்தர் உள்ளார்,Bakthar Ullaar - பக்தியை யுடையவருமாயிருப்பவர்கள் பரமன்,Paraman - பரம புருஷனுடைய அடி,Adi - திருவடிகளை சேர்வர்கள்,Saervargal - கிட்டப் பெறுவார்கள் |