Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 338 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
338ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 1
அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்களாடும் சீர்
சிலம்பாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே-4-2-1
தெய்வம் மகளிர்கள்,Deivam Magalirgala - தேவ ஸ்திரீகள்
சிலம்பு ஆர்க்க ,Silambu Aarka - (நமது) பாதச் சிலம்புகள் ஒலிக்கும் படி
வந்து ,Vandhu - (பூலோகத்தில்) வந்து
ஆடும் சீர்,Aadu Seer - நீராடும்படியான பெருமையை யுடைய
சிலம்பு ஆறு,Silambu Aaru - நூபுர கங்கையானது
பாயும்,Paayum - (இடைவிடாமல்) பெருகப் பெற்றுள்ள
தென் திருமாலிருஞ் சோலை,Then Thirumaalirun Cholai - அழகிய திருமாலிருஞ் சோலையானது,
அலம்பா,Alampaa - பிராணிகளை அலையச் செய்தும்
வெருட்டா,Veruttaa - பயப்படுத்தியும்
கொன்று,Konru - உயிர்க் கொலை செய்தும்
திரியும்,Thiriyum - திரிந்து கொண்டிருந்த
அரக்கரை,Arakkarai - ராக்ஷஸர்களை
குலம் பாழ் படுத்து,Kulam Paazh Paduthu - ஸ குடும்பமாகப் பாழாக்கி
குலம் விளக்கு ஆய் நின்றகோன்,Kulam Vilakku Aay Nintragon - (இக்ஷ்வாகு வம்சத்துக்கு விளக்காய் நின்ற பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமான)
மலை,Malai - திருமலையாம்.