Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3383 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3383திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (நிச்சலும் சிந்திப்பது தவிர வேறொன்றுமறியாத சிசுபாலனையுமுட்படத் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட மஹாகுணத்தை யறிந்தவர்கள் அப்படிப் பட்ட குணவானுடைய திருக்குணங்களையன்றோ காதாரக் கேட்கவேணுமென்கிறார்.) 3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3
கேட்பார்,Ketpar - எம்பெருமானுடைய நிந்தைகளையேகா தாரக்கேட்கவேணுமென்கிற விருப்பமுடையவர்களுக்குங் கூட
செவி சுடு,Sevi sudu - கர்ணகடோரமான
கீழ்மை வசவுகளேவையும்,Keezmai vasavugalayevaiyum - மிகத் தண்ணிய தூஷணைகளையிட்டு தூஷிக்குமவனாய்
சேண் பால் பழம் பகைவன் சிசுபாலன்,Sen paal pazham pakaivan sishupalan - நெடுங்காலத்துப் பகைவனான சிசுபாலனுங்கூட
திரு அடி,Thiru adi - ஸ்லாமியான கண்ண பிரானுடைய
தாள் பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்தும்,Thaal paal adaindha thanmai arivaarai arindhum - திருவடிகளிலே ஸாயுஜ்யம்பெற்றபடியை யறிவாரை அறிந்து வைத்தும்,
கேட்பார்கள்,Kedpaarhal - நல்லது கேட்க வேணுமென்றிருக்குமவர்கள்
கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ,Keshavan keerthi allaal matrum kedparoh - எம்பெருமானுடைய கீர்த்திகளை யொழிய வேறொன்று கேட்பாரோ?