| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 34 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 12 | மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே–1-2-12 | மை,Mai - மையணிந்த தட,Thada - பெரிய கண்ணி,Kanni - கண்களையுடைய அசோதை,Asodhai - யசோதைப்பிராட்டியாலே வளர்க்கின்ற,Valarkkinra - வளர்க்கப்படுகின்றவனாய் தலைசெய்,Thalaisei - உயர்ந்த க்ஷேத்ரத்திலே (அலர்ந்த) நீலம் நிறம்,Neelam niram - கருநெய்தல் பூவினது போன்ற நிறத்தையுடையவான சிறுபிள்ளை,Sirupillai - (இந்த) பாலக்ருஷ்ணனுடைய நெய்,Ney - கூர்மைபொருந்திய தலை,Thalai - நுதியையுடைய நேமியும்,Nemiyum - திருவாழியும் சங்கும்,Sangum - திருச்சங்கும் நிலாவிய,Nilaviya - அமைந்திராநின்றுள்ள கைத்தலங்கள் வந்து காணீரே,Kaithalangal vandhu kaanire - உள்ளங்கைகளை வந்து காணீர்! கனம்,Kanam - பொன்னால்செய்த குழையீர் வந்து காணீரே,Kuzhaiyeer vandhu kaanire - காதணிகளையுடைய பெண்காள்! வந்து காணீர்!! |