Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 342 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
342ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 5
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன்
ஒரு வாரணம் உயிருண்டவன் சென்றுறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்தோட கடல் வண்ணன்
திரு வாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே–4-2-5
ஒரு வாரணம்,Oru Varanam - (ஸ்ரீகஜேந்திராழ்வானாகிற ஒரு யானையினிடத்து
பணி,Pani - கைங்கர்யத்தை
கொண்டவன்,Kondavan - ஸ்வீகரித்தருளினவனும்
கஞ்சன் தன்,Kanjan Than - கம்ஸனுடைய
ஒரு வாரணம்,Oru Varanam - (குவலயாபீடமென்ற) ஒரு யானையினுடைய
உயிர்,Uyir - உயிரை
உண்டவன்,Undavan - முடித்தவனுமான கண்ணபிரான்
சென்று,Senru - எழுந்தருளி
உறையும்,Uraiyum - நித்ய வாஸம் பண்ணப் பெற்ற
மலை,Malai - மலையாவது:
கரு வாரணம்,Karu Varanam - கறுத்ததொரு யானை,
தன் பிடி,Than Pidi - தன்னுடைய பேடை யானது
துறந்து ஓட,Thurandhu Oda - (பிரணய ரோஷத்தினால்) தன்னை விட்டிட்டு ஓடப்புக,
(அதுகண்ட அவ்வானையானது) கடல் வண்ணன் திரு ஆணை கூற,Athukanda Avvaanaiyanadhu Kadal Vannan Thiru Aanai Koora - “கடல் போன்ற நிறமுடைய அழகர் மேலாணை” என்று சொல்ல
திரியும்,Thiriyum - (அப்பேடை யானது அவ்வாணைக்குக் கட்டுப்பட்டு அப்புறம் போக மாட்டாமல்) மீளா நின்றுள்ள
தண்,Than - குளிர்ந்த
மாலிருஞ்சோலை,Maaliruncholai - திருமாலிருஞ் சோலை மலையாம்.