திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 345 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
345பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 8
குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங் கானிடைச் சிறு கால் நெறியே போக்கு விக்கும் செல்வன் பொன் மலை அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறு காலைப் பாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-8
பதவுரை Show / Hide
குறுகாத,Kurugaadha - திருமலையைக் கிட்டி அநுகூலாய் வாழலாமாயிருக்க, அது செய்யாமல் விலகுகின்ற
மன்னரை,Mannarai - அரசர்களுடைய
கூடு,Koodu - இருப்பிடத்தை
கலக்கி,Kalakki - குலைத்து (அழித்து)
வெம்,Vem - தீஷணமான
கானிடை,Kaanidai - காட்டிலே
சிறு கால் நெறியே ,Siru Kaal Neriye - சிறந்த வழியில்
போக்குவிக்கும்,Pookkuvikkum - (அவ் வரசர்களை) ஓட்டுகின்ற
செல்வன்,Selvan - திருமால் (எழுந்தருளியிருக்கிற)
பொன் மலை,Pon Malai - சிறந்த மலையை யுடையவன்
அறுகால்,Arukaal - ஆறு கால்களை யுடைய
வரி வண்டுகள்,Vari Vandugal - அழகிய வண்டுகளானவை
ஆயிரம் நாமம் சொல்லி,Aayiram Naamam Solli - (எம்பெருமானுடைய) ஸஹஸ்ர நாமங்களை ஆளாத்தி வைத்து
சிறு காலைப் பாடும்,Siru Kaalaip Paadum - சிற்றஞ் சிறு காலையில் அடி பணியுமாற்றைக் கூறியவாறு பாடுமிடமான
தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை