Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 346 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
346ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 9
சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாயொப்பான்
சிந்தும் புறவில் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-9
பூதங்கள்,Boothangal - ஸ்ரீ வைஷ்ணவ பூதங்களானவை (தேக அபாஷணமே பண்ணிக் கொண்டு திரியும் நாஸ்திரிகர்களைக் கண்டால், அவர்களை)
சிந்தப் புடைத்து,Sindhap Pudaiththu - (அவயங்கள்) சிதறும்படி அடித்துக் கொன்று
செம் குருதி கொண்டு,Sem Kurudhi Kondu - (அதனால் அவர்களுடலினின்று புறப்படுகிற) சிவந்த ரத்தத்தைக் கொண்டு
அந்தி,Andhi - அந்திப் பொழுதிலே
பலி கொடுத்து,Pali Koduththu - (எம்பெருமானுக்கு) ஆராதந ரூபமாக ஸமர்ப்பித்து
ஆபத்து தனம் செய்,Aapaththu Dhanam Sei - ஆபத் காலத்துக்குத் துணையாமிடமென்று ஸேவிக்குமிடமும்
அப்பன்,Appan - ஸ்வாமி (எழுந்தருளியிருக்க மிடமுமான)
மலை,Malai - மலையாவது,
இந்திர கோபங்கள்,Indhira Gobangal - பட்டுப் பூச்சிகளானவை
எம் பெருமான்,Em Perumaan - அனைவர்க்கும் ஸ்வாமியான அழகருடைய
கனி வாய்,Kani Vaai - (கொவ்வைக்) கனி போன்ற திரு வதரத்திற்கு
ஒப்பான்,Oppaan - போலியாக
சிந்தும்,Sindhum - (கண்ட விடமெங்கும்) சிதறிப் பறக்கப் பெற்ற
புறவில்,Puravil - தாழ்வரையை யுடைய
தென் திருமாலிருஞ்சோலை.,Then Thirumaalirunjolai - தென் திருமாலிருஞ்சோலை