| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 349 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 1 | உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந் தோடிச் சென்ற உருப்பனை யோட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை பொருப்பிடைக் கொன்றை நின்று முறி யாழியும் காசும் கொண்டு விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ் சோலையதே–4-3-1 | உருப்பிணி நங்கை தன்னை,Uruppini Nangai Thannai - ருக்மிணிப் பிராட்டியை மீட்பான்,Meetpaan - கண்ணனுடைய தேரில் நின்றும்) திருப்பிக் கொண்டு போவதற்காக தொடர்ந்து,Thodarnthu - (அத் தேரைப்) பின் தொடர்ந்து கொண்டு ஓடிச் சென்ற,Odi Senra - ஓடி வந்த உருப்பனை,Uruppanai - உருப்பன் என்றவனை ஓட்டிக் கொண்டு இட்டு,Ottik Kondu Ittu - ஓட்டிப் பிடித்துக் கொண்டு (தேர்த் தட்டிலே) இருத்தி உறைத்திட்ட,Uraiththitta - (அவனைப்) பரிபவப் படுத்தின உறைப்பன் மலை,Uraippan Malai - மிடுக்கை உடைய கண்ண பிரான் (எழுந்தருளு யிருக்கிற)மலையாவது கொன்றை,Kondrai - கொன்றை மரங்களானவை பொருப்பு இடை நின்று,Poruppu Idai Nindru - மலையிலே நின்று முறி,Muri - முறிந்து பொன்,Pon - பொன் மயமான ஆழியும்,Aazhi Yum - மோதிரங்கள் போன்ற பூ நரம்புகளையும் காசும்,Kaasum - (பொற்காசு)போன்ற பூ விதழ்களையும் கொண்டு,Kondu - வாரிக் கொண்டு விருப்பொடு வழங்கும்,Viruppodu Vazhanguum - ஆதரத்துடனே (பிறர்க்குக்)கொடுப்பவை போன்றிருக்கப் பெற்ற வியன்,Viyan - ஆச்சரியமான மாலிருஞ்சோலை அதே,Maalirunjolai Adhe - அந்தத் திருமாலிருஞ்சோலையே யாம். |