| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 35 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 13 | வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே–1-2-13 | வண்டு அமர்,Vandhu amar - வண்டுகள் படிந்திருக்கிற பூ குழல்,Poo kuzhal - பூ அணிந்த குழலையுடையளான ஆய்ச்சி,Aaychchi - யசோதைப் பிராட்டியானவள் மகனாக கொண்டு,Maganaaga kondu - (தன்) புத்ரனாக ஸ்வீகரித்து வளர்க்கின்ற,Valarkkinra - வளர்க்கப் பெற்றவனாய் கோவலர்,Kovalar - ஸ்ரீநந்தகோபருடைய குட்டற்கு,Kuttarku - பிள்ளையான கண்ணபிரானுடைய, அண்டமும்,Andamum - அண்டங்களையும் நாடும்,Naadum - (அவற்றினுள்ளே கிடக்கிற) சேதநாசேதநங்களையும் அடங்க,Adanga - முழுதும் விழுங்கிய,Vizhungiya - (ப்ரளயகாலத்தில்) கபளீகரித்த கண்டம் இருந்த ஆ,Kandam irundha a - கழுத்திருந்தபடியை |