Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 350 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
350ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 2
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை
நஞ்சுமிழ் நாகமெழுந் தணவி நளிர் மா மதியை செஞ்சுடர்
நா வளைக்கும் திருமாலிருஞ் சோலையதே–4-3-2
கஞ்சனும்,Kanjanum - கம்ஸனும்
காளியனும்,Kaaliyanum - காளிய நாகமும்
களிறும்,Kalirum - (குவலயாபீடமென்ற) யானையும்
மருதும்,Maruthum - இரட்டை மருத மரங்களும்
எருதும்,Eruthum - (அரிஷ்டாஸுரனாகிற) ரிஷபமும்
வஞ்சனையின்,Vanjanaiyin - (தந்தாமுடைய) வஞ்சனைகளாலே
மடிய,Madiya - (தாம் தாம்) முடியும்படி
வளர்ந்த,Valarntha - (திருவாய்ப்பாடியில்) வளர்ந்தருளினவனும்
மணி வண்ணன் மலை,Mani Vannan Malai - நீல மணி போன்ற நிறமுடையவனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கும்) மலையாவது:
நஞ்சு,Nanju - விஷத்தை
உமிழ்,Umizh - உமிழா நின்றுள்ள
காகம்,Kaagam - (மலைப்) பாம்பானவை
நளிர்,Nalir - குளிர்ந்த
மா மதியை,Maa Mathiyai - (மலைச் சிகரத்தின் மேல் தவழுகின்ற)
பூர்ணச்சந்திரனை,Poornachandiranai - (தமக்கு உணவாக நினைத்து)
எழுந்து,Ezhnthu - (படமெடுத்துக்) கிளர்ந்து
அணலி,Anali - கிட்டி
செம் சுடர்,Sem Sudar - சிவந்த தேஜஸ்ஸை யுடைய
நா,Naa - (தனது) நாக்கினால்
அளைக்கும்,Alaikkum - (சந்திரனை) அளையா நிற்குமிடமான
திருமாலிருஞ்சோலை அதே.,Thirumaalirunjolai Adhe - திருமாலிருஞ்சோலை அதே.