| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 351 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 3 | மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்தெறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் மலை புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே–4-3-3 | மன்னு,Mannu - (தன்னை அழிவற்றவனாக நினைத்துப்) பொருந்திக் கிடந்த நரகன் தன்னை ,Naragan Thannai - நரகாஸுரனை சூழ்போகி,Soolpoghi - கொல்லும் வகைகளை ஆராய்ந்து வளைத்து,Valaiththu - (அவனைத் தப்பிப்போக முடியாதபடி)வளைத்துக் கொண்டு எறிந்து,Erinthu - (திரு வாழியாலே) நிரஸித்து கன்னி மகளிர் தம்மை,Kanni Magalir Thammai - (அவனால் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருந்த பதினாறாயிரத் தொரு நூறு) கன்னிகளையும் கவர்ந்த,Kavarntha - தான் கொள்ளை கொண்ட கடல் வண்ணன்,Kadal Vannan - கடல் போன்ற நிறமுடையவனான கண்ண பிரான் (எழுந்தருளியிருக்கிற) மலை,Malai - மலையாவது: புன்னை,Punnai - புன்னை மரங்களும் செந்தியொடு,Sendhiyodu - சுர புன்னை மரங்களும் புனம் வேங்கையும்,Punam Vengaiyum - புனத்திலுண்டாகிற வேங்கை மரங்களும் கோங்கும்,Kongum - கோங்கு மரங்களும் நின்று,Ninru - (புஷ்பங்களால் நிறைந்த ஒழுங்கு பட) நின்று பொன்னரி மலைகள் சூழ்,Ponnari Malaigal Sool - (திருமலைக்குப்) பொன்னரி மாலைகள் சுற்றினாற் போலே யிருக்கப் பெற்ற பொழில்,Pozhil - சோலைகளை யுடைய மாலிருஞ்சோலை அதே,Maalirunjolai Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |